2019 ராசிபலன்: துலாம் முதல் மீனம் வரை..! 

இந்த ஆண்டு மட்டும் மூன்று முறை சூரிய கிரகணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதன்படி முதலாவதாக ஜனவரி 5 , 6 இரண்டாவது சூரிய கிரகணம் ஜுலை 2 , மூன்றாவது சூரிய கிரகணம் டிசம்பர் 26 இல் தோன்றும். இந்த மூன்று சூரிய கிரகணம் ஏற்படும் கால நிலையில் 12 ராசியினருக்கு ஏற்படும் மாற்றம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

துலாம்

இதுநாள் வரை நிலுவையில் இருந்து வந்த உங்களது வேலைகள் விரைவாக நிறைவேறும். இரண்டாவது சூரிய கிரகணத்தை அடுத்து வாழ்வில் உங்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலம் தெரிய தொடங்கும். மூன்றாவது சூரிய கிரகணம் ஏற்படும் போது உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மனிதரின் வழிகாட்டியுடன் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல முடியும். புதிய முன்னேற்றத்தை அடைவீர்கள். 

விருச்சகம் 

முதல் சூரிய கிரகணம் முடிந்த பின்பு கல்வியில் பெரிய முன்னேற்றம் இருக்கும். உங்களுக்கு சாதகமான நேரம் பிறக்கும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். இரண்டாவது மற்றும் மூன்றாவது சூரிய கிரகணம் நேரத்தில் வாழ்க்கையில் பெரிய முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள். அப்போது தெளிவான முடிவை எடுப்பது நல்லது.

தனுசு 

முதல் சூரிய கிரகணம் நேரத்தின் போது ஒரு வெற்றியை நோக்கி நகர்வதை நீங்களே உணர்வீர்கள். இரண்டாவது சூரிய கிரகணத்தை அடுத்து உங்களது நிதி நிலைமை நன்றாக இருக்கும். மூன்றாவது சூரிய கிரகணம் ஏற்படுவதை அடுத்து, வாழ்க்கையில் நல்ல ஒரு திட்டமிடலை செய்வீர்கள். பொருட்களை வாங்குவதற்கும் கவனம் செலுத்துவீர்கள். சுயமரியாதையை மேம்படுத்திக் கொள்வீர்கள். 
       
மகரம்

இதுநாள் வரை மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த நீங்கள் இந்த ஆண்டு முதல் மற்றும் இரண்டாவது சூரிய கிரகணம் முடிந்த பிறகு நீங்கள் எதை செய்ய விருப்பம் தெரிவித்தாலும் அது நடக்கும் மூன்றாவது சூரிய கிரகணத்தை அடுத்து உங்களுக்குள் ஒருவித மன அமைதி வேண்டும் என நினைப்பீர்கள்

கும்பம்  

முதல் சூரிய கிரகணத்தை அடுத்து உங்கள் வாழ்க்கையில் இதுவரை தாங்கள் அடைந்ததை நினைவுபடுத்தி பார்ப்பீர்கள். இரண்டாவது சூரிய கிரகணம் முடிந்த பின்பு வெற்றி அடைய முற்போக்கான யோசனையை எதிர்கொள்வீர்கள். வாழ்வில் பல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். மூன்றாவது சூரிய கிரகணத்தை அடுத்து மிக வேகமான வளர்ச்சியைக் காண்பீர்கள். அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.

 மீனம்  

முதல் சூரியகிரகணம் வாழ்க்கையில் தரமான ஒரு விஷயத்தை கற்றுக்கொடுக்கும். உங்கள் மூளை சொல்வதை விட உங்கள் இதயம் சொல்வதை கேட்டால் ஆக சிறந்தது. இரண்டாவது சூரிய கிரகணத்தை எடுத்து வெளியில் உங்களுடனான நட்பை குறைத்துக் கொள்வது நல்லது வாழ்வில் உங்களுடனே இருக்கக்கூடிய உங்கள் துணைக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். இதை செய்தாலே அனைத்து நிம்மதியும் உங்களை வந்தடையும்.