Emergency kit: ஆபத்தில் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள்... எப்போதும் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்!

Emergency kit: கீழே குறிப்பிட்டுள்ள மருத்துவ உபகரணங்கள் எப்போதும் உங்கள் வீட்டில் வைத்திருப்பது அவசியம்.இந்த உபகரணங்கள் ஆபத்து நேரத்தில் உங்களது உயிரை காப்பாற்ற உதவி செய்கின்றன.

Homemade emergency kit

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருக்கும் வீடுகளில் எப்போதும், கீழே குறிப்பிட்டுள்ள மருத்துவ உபகரணங்கள் வைத்திருப்பது அவசியம். இந்த உபகரணங்கள் ஆபத்து நேரத்தில் உங்களது உயிரை காப்பாற்ற உதவி செய்கின்றன. ஏனெனில், மருத்துவ உபகரணங்கள் சிலவற்றை வாங்கி வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் வீட்டில் இருந்தபடியே நம் உடலை பரிசோதனை செய்து கொள்ள முடியும். எனவே, நாம் எப்போதும் ஸ்மார்ட்டாக யோசித்து விழிப்புடன் இருப்பது அவசியம். 

Homemade emergency kit

இனி அடிக்கடி மருத்துவமனை செல்ல வேண்டாம்:

 முன்பெல்லாம், உடல்  பரிசோதனைகளை மாதம் ஒருமுறை, வாரம் ஒருமுறை போய் செய்து கொள்வோம். ஆனால், சமீப காலமாக ஏற்பட்ட கொரோனா அச்சறுத்தல், நம்மை நிலை தடுமாற வைத்தது. இவை நம் மருத்துவமனைகளுக்கு சென்று உடல் பரிசோதனை செய்து கொள்வது நமக்கு கொரோனா தொற்று பரவும் அச்சத்தை ஏற்படுத்தியது. அதே சமயம், தொற்று காலத்தில் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை உடனுக்குடன் பரிசோதித்து தெரிந்து கொள்வது அவசியாமது.

இத்தகைய சூழலில் தான், மருத்துவ உபகரணங்கள் வீட்டில் இருப்பது, எவ்வளவு வசதி என்பதை புரிந்து கொண்டனர். தற்போது, கொரோனா பாதிப்பு குறைவு எனினும், கீழே சொன்ன மருத்துவ உபகாரணங்கள் வீட்டில் இருந்தால், மருத்துவமனைக்கு நீங்கள் செலவு செய்யும் பணம், மேற்கொள்ளும் அலைச்சல் மற்றும் நேரம் போன்றவற்றை குறைக்க முடியும். 

வீட்டில் என்னென்ன மருத்துவ உபகாரணங்கள் உடனடி தேவை என்பதை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்கள் படித்து, வாங்கி வைத்து கொள்ளுங்கள்.

குளுக்கோமீட்டர்

நீரிழிவு நோய் என்பது உலக அளவில், பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனையாக உள்ளது. இந்த குளோக்கோமீட்டர் மூலம், உங்கள் இரத்த சர்க்கரை அளவை வெறும் 5 வினாடிகளில் உங்களால் அறிந்துக்கொள்ள முடியும். எந்தவித வலியும் இல்லாமல் ஈசியாக உங்கள் இரத்தத்தின் சர்க்கரை அளவை மிகவும் துல்லியமான அளவுகளுடன் வழங்க இந்த குளுக்கோமீட்டர்கள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். 

Homemade emergency kit

 தெர்மோமீட்டர்:

உடல் வெப்பத்தை ஆய்வு செய்ய இது உதவிகரமாக இருக்கும் ஒரு கருவி  தெர்மோமீட்டர் ஆகும். இன்றைய சூழலில் மிகவும் அவசியமான சாதனம் ஆகும். கொரோனா காலத்தில்,மற்றவர்களுடன் நெருக்கமாக இருக்கும் சமயங்களில் தான் தொற்று பரவுகிறது என்று கண்டறியப்பட்ட சூழலில், இந்த தெர்மோமீட்டர் தான் மிக உதவியாக இருந்தது. ஒரு நபரை நேரடியாக தொட்டுப் பார்க்காமல் நேரடியாக தெர்மோமீட்டர் உடல் வெப்பத்தை ஆய்வு செய்ய உதவும். 

ரத்த அழுத்த பரிசோதனை மீட்டர்

உங்கள் ரத்த அழுத்தத்தை கணக்கீடு செய்ய பிளட் பிரஸர் மீட்டர் எனப்படும் இந்தக் கருவி  உதவும். மருத்துவமனைகளில் இதற்கு முன்பு, கையால் உபயோகிக்கும் பழைய மீட்டர்களை உபயோகம் செய்து வந்தனர். இப்போது டிஜிட்டல் மீட்டர்கள் வந்து விட்டன. இவற்றை நீங்களே வீட்டில் இருந்தபடியே எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Homemade emergency kit

ஆக்ஸிமீட்டர்

முன்பெல்லாம், நம்முடைய இரத்தத்தில் நடக்கும் அனைத்து விதமான செயல்பாடுகளும் நல்ல முறையில் ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்று மருத்துவரை அணுகி தெரிந்து கொள்கிறோம். அதற்கு இனி அவசியமில்லை நம் இரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவு, இரத்த அழுத்தம் போன்றவற்றை விறல் நுனியில் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்ஸிமீட்டர் மிகவும் முக்கியமான கருவி ஆகும். ஆக்ஸிமீட்டருடன் இணைந்து உங்கள் பல்ஸ் எண்ணிக்கையை ஆய்வு செய்யும் வசதி இருந்தால், கூடுதல் உபயோகமாக இருக்கும்.

மேலும் படிக்க...Hair care tips: முடி உதிர்வா..? வேரில் இருந்தே உங்கள் முடி அடர்த்தியாக வளர ஹோம்மேட் ஷாம்பூ இதோ!


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios