Hair care tips: கோடை  காலம் துவங்கி விட்டதால், ஆண்கள், பெண்கள் இருவருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை அதிகரித்து காணப்படும். 

கோடை காலம் துவங்கி விட்டதால், ஆண்கள், பெண்கள் இருவருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை அதிகரித்து காணப்படும். 

ஆண்கள், பெண்கள் இருவருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை பெரும் மன உளைச்சலை தருகின்றது. நடைமுறை வாழ்வில் எப்போதும் முடி உதிர்தலை தவிர்ப்பதில் பெண்களை விட ஆண்களுக்குதான் அக்கறை அதிகம். காரணம், பெண்களுக்கு கொட்டும் முடிக்கு இணையாக பெரும்பாலும் வளர்ந்துவிடுகிறது. ஆனால், ஆண்களுக்கு அப்படியல்ல. 'போனால் போகட்டும் போடா' என்றும் இருக்க முடிவதில்லை.

பெண்களை விட ஆண்களுக்கு முடி உதிர்தல் அதிகமா?

திருமணத்தின் போது முடி இல்லாத, முடி குறைவாக உள்ள ஆண்கள் வயது முதிர்ந்த தோற்றம் அளிப்பர். அவ்வளவு ஏன், ஒரு சில சமயங்களில் ஆண்களின் திருமணம் தடை ஆவதற்குக் கூட முடி உதிர்வு மிக முக்கிய காரணமாக அமைகிறது.

பெண்களை விட ஆண்களுக்கு, மன அழுத்தம் அல்லது மனதில் ஏதேனும் குழப்பம் இருந்தாலே, ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, முடி கொட்ட ஆரம்பிக்கும். குறிப்பாக, 50 வயதிற்குள், 50% ஆண்களும், 25% பெண்களும், முடி உதிர்தலால் பாதிக்கப்படுகின்றனர் என்று சமீபத்திய ஆய்வின் முடிவில் மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இது போன்ற முடி உதிர்வு பிரச்சனையால், ஆண்கள் மற்றும் பெண்கள் மிகுந்த கவலைப்பட வேண்டாம்! இவற்றை சரி செய்வதற்கு, இந்த இயற்கை ஷாம்பூ தயாரிப்பு முறையை பயன்படுத்துங்கள்.. மேலும் உங்களுக்கு இவை உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான முடியை கொடுக்கும். ஆண்களே நீங்கள் உங்கள் மனைவி அல்லது அம்மாவை இது போன்ற ஷாம்பூ தயாரிப்பு முறைக்கு உதவிக்கு அழைக்கலாம். 

 தேவையான பொருட்கள்:

சமையல் சோடா - 2 டீஸ்புன் 

ஆப்பிள் சைடர் வினிகர் - 2 டீஸ்புன் 

தண்ணீர் - 6 டீஸ்புன் 

டீ ட்ரீ எண்ணெய் – சில சில துளிகள்

செய்முறை விளக்கம்:

நீங்கள் குளிப்பதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பு, ஒரு பாத்திரத்தை எடுத்து, மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் ஒன்றாக பேஸ்ட் போன்று கலக்கவும்.

ரொம்பவும்கெட்டியாக இந்த பேக்கை கலக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. கொஞ்சம் தளதளவென கலக்கலாம்.

பிறகு, உங்கள் தலைமுடியை தண்ணீரில் நனைக்கவும். பிறகு பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் எல்லா இடங்களிலும் படும்படி இந்த பேக்கை போட்டு விட்டு, அதன் பின்பு முடியின் நுனி வரை இந்த பேக்கை நன்றாக போட்டு கொள்ளவும்.

பிறகு, உச்சந்தலையில் தொடங்கி தலை முழுவதும் மெதுவாக மசாஜ் செய்யவும். ஐந்து அல்லது பத்து நிமிடம் அப்படியே விட்டுவிட்டு குளிர்ந்த தண்ணீரில் குளியல் போடவும். 

இதோடு மட்டுமல்லாமல் பச்சை பயிரை வாரத்தில் இரண்டு நாட்கள் சுண்டல் செய்து சாப்பிட்டு வந்தால், அப்போது உங்களுடைய தலைமுடி அழகாக தோற்றமளிக்கும்.

மேலும் படிக்க...Omam recipe: கோடையில் வரும் செரிமான கோளாறு, வயிற்று கடுப்பு பிரச்சனை...சரி செய்யும் சுவையான ஓமம் சாதம் ரெசிபி..!