தொப்பையை குறைக்க உதவும் 'மஞ்சள்' பானம்.. எப்படி தயாரிக்கனும்?

Belly Fat Reduction Drink : தொப்பை கொழுப்பை குறைக்க தினமும் இந்த பானத்தை குடித்தால் போதும். அது என்ன பானம்? அதை வீட்டில் தயாரிப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

homemade drink to reduce belly fat in tamil mks

இன்றைய நாட்களில் உடல் பருமன் ஒரு தீவிர பிரச்சினையாகி விட்டது. இதற்கு முக்கிய காரணம் தற்போதைய வாழ்க்கை முறை தான். இப்போதெல்லாம் ஒரேயிடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இதனுடன் உடல் செயல்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. சொல்லப்போனால் பெரும்பாலும் வாக்கிங் அல்லது எந்த விதமான உடற்பயிற்சியும் செய்யக்கூட விரும்புவதில்லை. ஆனால் அவர்கள் சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் அதிகம் கொடுக்கின்றனர். இதனால் உடல் பருமன் தான் அதிகரிக்கிறது.
அதுவும் குறிப்பாக, உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு தொப்பை ரொம்பவே அதிகரிக்கிறது.

வயிற்றை சுற்றி இருக்கும் அதிகப்படியான தொப்பை கொடுப்பானது அழகைக் குறைக்கிறது. முக்கியமாக இந்த கொழுப்பை விரைவில் குறைப்பது ரொம்பவே கஷ்டம். இதனால் அவற்றை குறிக்க பலர் பலவிதமான விஷயங்களை செய்கிறார்கள். ஆனால், தொப்பை குறைக்க ஒரு தீர்வு உள்ளது அதை பின்பற்றுவதன் மூலம் உங்களது வயிற்றை சுற்றி இருக்கும் கொழுப்பு குறைவது மட்டுமின்றி, உங்களது இடுப்பு அங்குலமும் குறைந்து விடும். இதற்கு தொப்பை கொழுப்பை குறைக்க தினமும் ஒரு பானத்தை நீங்கள் குடித்து வந்தால் போதும். அது என்ன பானம்? அதை வீட்டில் தயாரிப்பது எப்படி என்பதை பற்றி இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படிங்க: உண்மையில் தொப்பையை குறைக்க 'எது' உதவும் தெரியுமா? வாக்கிங் vs ரன்னிங்?

தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் பானம்:

தேவையான பொருட்கள்:

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கிராம்பு - 2
இஞ்சி - 1 துண்டு (துருவியது)
இலவங்கப்பட்ட - 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு - அரை ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 சிட்டிகை
தண்ணீர் - 1 கிளாஸ்

தயாரிக்கும் முறை:

இதற்கு முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். இப்போது அதில் கிராம்பு, துருவிய இஞ்சி, மஞ்சள் தூள், மிளகுத்தூள், இலவங்கப்பட்டை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். தண்ணீரின் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்துவிட்டு, பாத்திரத்தை கீழே இறக்கி ஆற வைக்கவும். பிறகு அதில் எலுமிச்சை சாறு கலக்கவும். அவ்வளவுதான் தொப்பை குறையுப்பை குறைக்க உதவும் பானம் தயார்.

இதையும் படிங்க:  உட்கார்ந்த இடத்திலே தொப்பையை குறைக்க ஆசையா? இந்த '3' விஷயத்தில் கவனம்!!  

எப்போது குடிக்கலாம்?

இந்த பானத்தை நீங்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் விரைவில் நல்ல பலன் காண்பீர்கள்.

 இந்த பானத்தின் நன்மைகள்:

- இஞ்சியில் ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. மேலும் இது வீக்கத்தை குறிக்க உதவுகிறது.

- மஞ்சளில் இருக்கும் குர்குமியின் வீக்கத்தை குறைக்கவும், கொழுப்பை எரிக்கவும், வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

- லவங்கப்பட்டை வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கொழுப்பு எரியும் செயல்முறையை மேம்படுத்தவும் உதவுகிறது.

- கருப்பு மிளகில் இருக்கும் பைபரின் செரிமானத்தை மேம்படுத்தவும், எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

- எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செரிமானத்தை மேம்படுத்தவும், உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.

குறிப்பு : மருத்துவரின் ஆலோசனை பெறாமல் எதையும் சாப்பிட வேண்டாம் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios