முடி கருகருவென வேகமாக வளர.. கருவேப்பிலை எண்ணெய் இப்படி தடவுங்க..
Curry Leaves Oil Benefits : கறிவேப்பிலை எண்ணெயை வீட்டில் தயாரிப்பது எப்படி மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக தலை முடி முன்கூட்டியே நரைக்க ஆரம்பித்து விடும். இதுதவிர, முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் குறை ஏற்பட ஆரம்பிக்கும். தொடர்ந்து முடி உதிர்வதால் பலர் கவலைப்பட தொடங்குகின்றனர். குறிப்பாக, வீட்டு வேலை, அலுவலக வேலைகளில் தனக்கென நேரம் கிடைக்காமல் இருக்கும் பெண்கள். இதற்கு பாட்டி சொன்ன இந்த வைத்தியத்தை பின்பற்றினால் தலைமுடியை மீண்டும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் முடியும், முடி உதிர்தல் போன்றவற்றில் இருந்து விடுபடலாம். எனவே, இன்றைய கட்டுரையில் கறிவேப்பிலை எண்ணெயை வீட்டில் தயாரிப்பது எப்படி மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: தலையில் வழுக்கை விழாமல் இருக்க.. முடி வேகமாக வளர.. கருவேப்பிலை ஹேர் பேக்கை இப்படி யூஸ் பண்ணுங்க!!
கறிவேப்பிலை எண்ணெய் தயாரிக்கும் முறை :
கறிவேப்பிலை எண்ணெய் தயாரிக்க முதலில், தேவையான அளவு கருவேப்பிலையை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு சுமார் 100 கிராம் தேங்காய் எண்ணெயை அடுப்பில் ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சிறிதளவு சூடானதும் அதில் எடுத்து வைத்த கறிவேப்பிலையை அதில் சேர்த்து, சுமார் 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும். இதனுடன் வெந்தயத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெயின் நிறம் நன்கு மாறியதும், பாத்திரத்தை அடுப்பில் இருந்து கீழே இறக்கி ஆற வைக்கவும். எண்ணெய் நன்கு ஆறியதும் அதை வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி பயன்படுத்துங்கள். வாரத்திற்கு இரண்டு முறை இந்த எண்ணெயை தலை முடியில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், படிப்படியாக முடி உதிர்வு நின்று, முன்பே விட முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
இதையும் படிங்க: தினமும் காலை வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் என்ன நடக்கும்? வியப்பான உண்மைகள்!
கறிவேப்பிலை எண்ணெயின் நன்மைகள் :
- இது உங்கள் தலைமுடியை ஆழமாக வலுப்படுத்துகிறது மற்றும் இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சேதமடைந்து முடியை சரி செய்ய உதவுகிறது.
- மேலும் இந்த எண்ணெய் முடி வறட்சியை குறைக்கவும், முடி உடைவதை தடுக்கவும் பயன்படுகிறது.
- அதுமட்டுமின்றி, இந்த கருவேப்பிலை எண்ணை முன்கூட்டியே முடி நடை நரைப்பதை தடுக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
- மேலும், முடி உதிர்வை தடுக்கவும் பயன்படுகிறது. இதற்கு இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள்.
முக்கிய குறிப்பு : கறிவேப்பிலை எண்ணெயின் அதிக நன்மைகளை பெற, இரவில் இந்த எண்ணெயைக் கொண்டு உங்கள் தலைமுடியில் தடவி நன்கு மசாஜ் செய்து வந்தால் இரத்த ஓட்டம் மேம்படும். இதனால் முடிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D