சிலருக்கு வெகு தூரம் பயணம் மேற்கொள்ளும் போது வாந்தி, மயக்கம் ஏற்படும்.இதனை தடுக்கும் எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.
சிலருக்கு வெகு தூரம் பயணம் மேற்கொள்ளும் போது வாந்தி, மயக்கம் ஏற்படும்.இதனை தடுக்கும் எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.
புது புது இடங்களுக்குப் பயணம் செய்வது, அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். அங்குள்ள இயற்கை சூழலை ரசிப்பது சுற்றிபார்ப்பது போன்ற எண்ணற்ற ஆசைகளுடன் வீட்டில் இருந்து கிளம்பி செல்வார். ஆனால், செல்லும் வழியில் தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் கூட தாக்கு பிடிக்க முடியாமல் சிலருக்கு மயக்கம், வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் பாடாய்ப்படுத்தும். அதிலும், மலை பிரதேசம் என்றால் சொல்லவே வேண்டாம். இதற்கு மோஷன் சிக்னஸ் (motion sickness) என்று பெயர் உண்டு. எமிட்டோஃபோபியா என்பது வாந்தி எடுப்பதன் மீதுள்ள அதீதமான பயத்திற்கு பெயர். இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க உதவும் சில எளிய டிப்ஸ்கள் இங்கே உள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

வெறும் வயிற்றில் பயணத்தை தவிர்க்கவும்:
சாப்பிடாமல் அல்லது ஏதேனும் திரவங்களை குடிக்காமல் பயணம் செய்வது வாந்தி உணர்வை தவிர்க்க உதவும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் வெறும் வயிற்றில் பயணம் செய்வதை தவிர்க்க நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் அதே சமயம் அதிக உணவு அல்லது திரவங்களை எடுத்து கொள்ளாமல் மிதமாக சாப்பிடுவது நல்லது என்கிறார்கள்.
புத்தகங்கள் வாசிப்பு:
சிலர் தங்களது பயணத்தின் போது புத்தகங்களை படித்து கொண்டே பயணம் செய்ய விரும்புகிறார்கள். புத்தகங்களை வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். எனினும் உங்களுக்கு மயக்கம், வாந்தி உள்ளிட்ட உடல் உபாதை பிரச்சனை இருந்தால் பயணங்களின் போது புத்தகங்களை படிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பயணத்தின் போது புத்தகங்களை படிக்க முயலுவது வாந்தி அல்லது குமட்டலை ஏற்படுத்தும்.
பின் இருக்கையில் உட்கார வேண்டாம்:
மயக்கம், வாந்தி உள்ளிட்ட உடல் உபாதை பிரச்சனை உள்ளவர்கள் பேருந்து அல்லது காரின் பின் பயணிகள் இருக்கையில் உட்காருவதை தவிர்க்க முயற்சிக்கவும். வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணம் செய்வது ''மோஷன் சிக்னஸ்'' உள்ளவர்களுக்கு தலை சுற்றலை ஏற்படுத்துகிறது.
வயிறு நிறைய சாப்பாடு வேண்டாம்:
வயிறு நிறைய சாப்பாடு இருக்கும் போது பயணத்தின் போது வாந்தி வர ஆரம்பிக்கும். இதனை தடுக்க ஒரு எலுமிச்சை பழத்தை கையில் வைத்துக்கொண்டு செல்லவேண்டும். வாந்தி மயக்கம் ஏற்படும் போது எலுமிச்சையை வாயில் வைக்க வேண்டும். இதனால் வாந்தி மயக்கம் தடைபட்டுவிடும்.
எலுமிச்சை பழச்சாற்றில் சிறிது உப்பு கலந்து பருகுவது:
பயணத்திற்கு முன்பு, ஒரு எலுமிச்சை பழச்சாற்றில் சிறிது உப்பும், கொஞ்சம் அதிகமாகவே மிளகு தூளும் சேர்த்துக் குடிக்கவும். பின்னர் பயணத்தின் போது புதினா இலைகளைச் சாப்பிடுவது வாந்தி வருவது போல் இருக்கும் பிரமையில் இருந்து விடுதலை அளிக்கும். இதைப் பின்பற்றினால் எந்தப் பயமும் இல்லாமல் நீங்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.

மோஷன் சிக்னஸிருந்து விடுபட, சிறிது சர்க்கரை அல்லது கருப்பு உப்புடன் (black salt) வறுத்த கிராம்பு பொடியை ஒரு சிட்டிகை சாப்பிடுவது வாந்தியை தவிர்க்க உதவும்.
மேலும், இந்த பிரச்சினை அடியோடு நிற்க தினசரி ஒரு நெல்லிக்கனி என தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் ஒரே அடியாக இந்த பிரச்சினை நீங்கி விடும்.
