பெரும்பாலானோர், எதிர்கொள்ளும் உபாதைகளில் ஒன்று, இருமும்போதும் தும்மும்போதும் கட்டுப்பாடில்லாமல் சிறுநீர்க் கசிவது. வெளியில் சொல்ல முடியாத இந்த அவஸ்தையை காலம் முழுவதும் நிறைய சுமந்து நபர்கள் கொண்டிருக்கிறார்கள்.அதிலும், குறிப்பாக கிராமங்களில் இதன் விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது.
பெரும்பாலானோர், எதிர்கொள்ளும் உபாதைகளில் ஒன்று, இருமும்போதும் தும்மும்போதும் கட்டுப்பாடில்லாமல் சிறுநீர்க் கசிவது. வெளியில் சொல்ல முடியாத இந்த அவஸ்தையை காலம் முழுவதும் நிறைய சுமந்து நபர்கள் கொண்டிருக்கிறார்கள். அதிலும், குறிப்பாக கிராமங்களில் இதன் விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது.

உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட சில அறுவை சிகிச்சைகளுக்கு உள்ளானவர்கள், சர்க்கரைநோய் மற்றும் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு சிறுநீர்க் கசிதல் பிரச்ச னை ஏற்படலாம். இவர்கள் வெளியே செல்லும்போது, சிறுநீரை அடக்குவர். அப்போது, சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீரை வெளியேற்ற அனுமதிக்கும் வால்வு அழுத்தப்பட்டு, வலுவிழந்து விடும். இதனால், சிறுநீர் கசிதல் நிகழும்.
ஆண், பெண் இருபாலருக்கும் இந்தப் பிரச்சனை ஏற்படும் என்றாலும், பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் தசைத் தளர்வு காரணமாக பெண்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள். தவிர, மெனோபாஸ் காலத்திலும் பெண்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.சிறுநீர்க் கசிவு, அபாயமில்லாத தொந்தரவுதான் என்றாலும், அது தரும் அசௌகர்ய உணர்வு மிகவும் எரிச்சலைத் தரும்.
இதற்கு சிகிச்சைக்கு நம்மை தயார் படுத்துவதற்கு முன்பு, வீட்டிலேயே சிறு பயிற்சிகள் மூலம் சரி செய்துவிடலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
சிறுநீர்க் கசிவிற்கு. மனஅழுத்தத்தைத் தவிர்க்க, மனதை எப்போதும் புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு யோகா, தியானம், காலை நடைப்பயிற்சிகள் செய்யலாம்.
ஆசனவாய் (Anus) மற்றும் மூத்திரத்தசை (Pelvic Muscle)ஆகிய இரண்டையும் ஒருசேர சுருக்கி, பின் தளர்த்துவதுதான் கெகல் பயிற்சி. மூச்சை உள்ளே இழுக்கும்போது ஆசனவாய் மற்றும் மூத்திரத்தசை ஆகிய இரண்டையும் சுருக்க வேண்டும். 5-10 விநாடிகளுக்குப் பிறகு, மூச்சை வெளியேற்றித் தளர்த்த வேண்டும். ஆனால், சிறுநீர் வரும்போது இந்தப் பயிற்சியைச் செய்யக் கூடாது.

காலை, மதியம், இரவு மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு முன்னர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு இந்தப் பயிற்சியைச் செய்யலாம். ஒவ்வொரு முறையும் பத்து தடவை என, ஒரு நாளைக்கு 30 முறை செய்ய வேண்டும்.
ஆனால், தொடர் இருமல் பிரச்சனை உள்ளவர்கள், மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சைகளைச் செய்துகொள்வது அவசியம். அதேபோன்று, சைனஸ், தொடர்ச்சியான தும்மல் பிரச்சனை உள்ளவர்கள், அதற்கு உண்டான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால், சிறுநீர்க் கசிவுப் பிரச்சனை முன்கூட்டியே தடுக்கப்படும் என்றார்.
பொதுவாகவே, இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் புகை, மது, அதிக அளவில் காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய் உள்ளிட்ட பிற இணை நோய் இருந்தால் உடனே அதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
