“ஏடிஎம்“ இல் பணம் எடுக்க ஆதார் அட்டை மட்டும் போதும்..!!! அடுத்தகட்ட அசத்தல் நகர்வு...!!!
நம்மில் எத்தனை பேருக்கு தெரியும், ஆதார் கார்டை பயன்படுத்தி , ஏ டி எம் இல் பணம் எடுக்க முடியும் என்று ....?
மகாராஷ்டிர மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் , DCB (Development Co-operative Bank}, இந்த புது திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
இந்த திட்டம் ஆரம்பத்தில், ஏப்ரல் 2016 இல், மும்பையில் ஆரம்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து , மக்களிடையே எதிர்பார்த்த அளவிற்கு விழிப்புணர்வு இல்லாததால், DCB (Development Co-operative Bank) வங்கியின் வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்திவந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் , பெங்களூருவில் தங்கள் சேவையை தொடங்கியது இந்த வங்கி.....
ஆதார் அட்டையை பயன்படுத்தி பணம் எடுப்பது எப்படி ?
- முதலில் 12 டிஜிட் ஆதார் எண்ணை , வங்கி கணக்கில் இணைக்க வேண்டும்
- பின்னர் ஏ டி எம் மிஷினில் பணம் எடுக்கும் போது, மிஷினில் உள்ள ஆப்ஷனை பயன்படுத்தி, 12 டிஜிட் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்.
- பின்னர், பையோ மெட்ரிக் விவரத்தை கொடுக்கவும். அதாவது, நம்முடைய கைரேகை அல்லது கருவிழியை பதிவு செய்யவும்.
- ஆதார் அட்டை மூலம் கைரேகை கருவிழி பயன்படுத்தி பணம் எடுக்கும் போது, நமக்கு ஏ டி எம் கார்ட் தேவைப்படாது . அதே சமயத்தில், சீக்ரெட் எண்ணும் பதிவிட வேண்டாம்.....
இதனால் பலன் என்ன ...?
- எப்பொழுதும் நம் கையில் கார்ட் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை
- ஏ டி எம் காரட் தொலைந்தால், ஆதார் எண்ணை வைத்து, ஏ டி எம் சென்டரிலேயே பிளாக் செய்யலாம்.
- நம் ஆதார் எண்ணை பயன்படுத்தி , பணம் எடுப்பதில் முறைகேடு நிகழாது.
கருப்பு பண ஒழிப்பில் தீவிரமாக இறங்கியுள்ள இந்தியா, இன்னும் சில மாதங்களிலேயே நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு முனேற்ற பாதையில் செல்லும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை...
இந்நிலையில், DCB (Development Co-operative Bank) வங்கியானது, அடுத்து வரும் 6 மாதத்தில், இந்தியா முழுக்க உள்ள சுமார் நானூறு ஏ டி எம் மையங்களில் இந்த சேவையை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
