உயிர்காக்க  "பிளேட்லெட்" வேண்டுமா..? உடனே அழையுங்கள் 78 78 78 20 20.. டெங்குவிலிருந்து மீள சரியான வாய்ப்பு..!

மெட்டா: கர்நாடகா மாநிலத்தில், 2019 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 6110 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. அதில் குறிப்பாக, பெங்களூரில் மட்டும் 3822 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிக மழையின் காரணமாக இந்த ஆண்டு இந்தியாவில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக டெங்குவிற்கு காரணமான கொசுக்களின் இனப்பெருக்கமும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் டெங்கு பாதித்தவர்களுக்கு HIT பிளேட்லெட் ஹெல்ப்லைன் பேருதவியாக அமைந்துள்ளது. பிளேட்லெட் பெற உடனடியாக 78 78 78 20 20 என்ற எண்ணிற்கு டயல் செய்யலாம்... தக்க சமயத்தில் பிளேட்லெட் பெற்று உயிர் காப்பாற்றலாம்.

பெங்களூர் : 2019 ஜனவரி முதல் இதுவரை 3000 ஆயிரத்திற்கு அதிகமானோர் டெங்குவால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு உள்ள இந்த தருணத்தில், டெங்குவால் உயிருக்கு போராடுபவர்களை மிக எளிதாக மீட்க 78 78 78 20 20 என்ற எண்ணை டயல் செய்தால் போதுமா..? இந்த வீடியோவை பாருங்கள்... 

 

டெங்கு குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கு தற்போது தனியார் மற்றும் பொது நிறுவன அமைப்புகளால் ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருந்தாலும் கோத்ரேஜ் நிறுவனம் தொடங்கியுள்ள HIT பிளேட்லெட் ஹெல்ப்லைன்  சேவையை  78 78 78 20 20 இந்த எண்ணிற்கு கால் செய்து பெறலாம். பிளேட்லெட் தேவைப்படுபவர்களும் இந்த எண்ணிற்கு அழைக்கலாம். பிளேட்லெட் வழங்க உள்ளவர்களும் இந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்து பிளேட்லெட் வழங்கலாம். இந்த ஹெல்ப்லைன் சேவை 24x7 இயங்கும். தற்போது, ​​மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், சென்னை மற்றும் அகமதாபாத் வரை இந்த சேவை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது 

கோத்ரேஜ் HIT சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டது. இதில் கோத்ரேஜ் HIT பிளேட்லெட் ஹெல்ப்லைன் எவ்வாறு உயிர் காப்பாற்ற உதவும் என்பதற்கான ஓர் உண்மை சம்பவத்தை இங்கே பகிரப்பட்டு உள்ளது. தற்போது டெங்கு வைரஸ் காட்டுத்தீ போல் பரவுகிறது. கர்நாடகாவில் 2017 ல் மட்டும் 17,265 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டதாகவும், 5 பேர் இறந்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிய வந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. 2018 ஆம் ஆண்டில் 3,161  பேர் பாதித்துள்ளதாகவும் மற்றும் 4 பேர் இறந்துள்ளதாகவும் தேசிய நோய் கட்டுப்பாட்டு திட்டம் (NVBDCP) அறிக்கை வெளியிட்டு உள்ளது.

மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவின் பல பகுதிகள் கடுமையான வெள்ளப்பெருக்குக்கு பின்னர் டெங்குவால் இன்றளவும் மக்கள் பாதிக்கப்படுவதால் HIT பிளேட்லெட் ஹெல்ப்லைன் மூலம் பயன் பெற்று வருகின்றனர். எனவே இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது 

பிளேட்லெட்டுகளைப் பெற அல்லது வழங்க முன்வந்தால், உடனடியாக 7878782020 ஐ அழைக்கவும். 

பதிவுகளுக்கு இங்கே கிளிக் செய்க