Holi festival: ஹோலி பண்டிகை என்பது, இந்தியாவில் கலர் பொடிகளை பூசி விளையாடும், இந்துக்களால் கொண்டாப்பட்டும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும்.

ஹோலி பண்டிகை, இன்று இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை, என்றாலே கலர் கலர் பொடிகளை பூசி விளையாடும் பண்டிகை என்று தான் நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்துக்களால் கொண்டாப்படும் மற்ற பண்டிகையை போலவே இந்த ஹோலி பண்டிகைக்கும் வியக்கத்தக்க வரலாற்று பின்னணி உள்ளது. இந்த நாளில் அதை பற்றி தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

ஹோலி வரலாற்று பின்னணி:

அரக்கன் இரணியனின் மகன் பிரகலாதன், மகாவிஷ்ணு மீது அதிக பக்தி கொண்டு அவர் ஒருவரையே கடவுள் என்று போற்றி, பூஜித்து வந்தான். இது, இரணியன் காதுக்கு வர அவன் தன் ஒருவரை மட்டுமே கடவுளாக பூஜை செய்ய வேண்டும் என்று பிரகலாதனை எச்சரித்தான். ஆனால், பிரகலாதன், மகாவிஷ்ணு ஒருவரே கடவுள் என்று உறுதியாக இருந்தார். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை ஒரு வழி காண நினைத்த இரணியன் தன் சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினான். 

ஹோலி நெருப்பு:

ஹோலிகா, நெருப்பினால் எரியாத தன்மை படைத்தவள். எனவே, தன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொருட்டு இரணியன், பிரகலாதனை தன் சகோதரியின் ஹோலிகாவின் மடியில் அமர்த்திக் கொண்டு நெருப்பின் நடுவில் அமரும்படி கூறினான். இதனால், பிரகலாதன் நெருப்பில் எரிந்து விடுவான் என்றும் இரணியன் நினைத்தான். 

ஆனால். மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து மீண்டான். ஆனால் ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானாள். இதையொட்டி தான் இந்த ஹோலிகா தகன் பண்டிகை கொண்டப்படுகிறது. 

ஹோலி புராணங்கள் பின்னணி:

கிருஷ்ண பகவான் கருப்பாக இருப்பார். ராதை சற்று நல்ல நிறத்துடன் இருப்பதாக தன்னை எல்லோரும் கிண்டல் செய்வதாக தன் தாயிடம் சென்று வருத்தப்பட்டாராம். பிறகு, கிருஷ்ண பகவானின் தயார் ராதையை அழைத்து, ராதாவுக்கு கலர் பொடிகளை தடவி கண்ணன் மமுன்பு அவரை சற்று கருப்பாக காட்டியதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளே ஹோலி பண்டிகையாக ஆண்டுதோறும் கொண்டாப்பட்டு வருகிறது. 

சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பா?

தீபாவளி போன்ற மற்ற இந்துக்களின் பண்டிகை காட்டிலும், இந்த ஹோலி பண்டிகையில் பயன்படுத்தப்படும் இயற்கை வண்ணங்கள் சுற்றுச்சூழலுக்கும் எவ்வித தீங்கையும் ஏற்படுத்தாது. 

அதுமட்டுமின்றி, இந்த இயற்கை வண்ணங்கள் விலங்குகளுக்கு ஆபத்தானவை அல்ல, அவை அதை உட்கொண்டாலும் எந்தத் தீங்கும் வராது.எனவே, இவை மற்றுமொரு சிறப்பாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க...Today astrology: மார்ச் 27 முதல் குரு உதயம்....ராஜ யோகம் பெறப்போகும் 5 ராசிகள்..! இன்றைய ராசி பலன்!