கிண்டி இந்துஸ்தான் சர்வதேச பள்ளியில்... பிரமாண்டமாக  நடந்த "கொரிய தின கொண்டாட்டம்"..! அசத்தல் வீடியோ உள்ளே..! 

கொரியா, “அமைதியான நிலம்” என அழைக்கப்படுவதற்கு காரணம் அந்நாட்டின் கலாச்சாரம், மற்றும் அவர்களின் நம்பிக்கைகளில் ஆழமாக வேரூன்றிய ஒரு நாடு என்பதே... கொரிய தினமான ‘அரிராங்’ தினத்தை கிண்டியில் உள்ள இந்துஸ்தான் சர்வதேச பள்ளி கடந்த 16 ஆம் தேதி (16 அக்டோபர் 2019 ) சிறப்பாக கொண்டாடியது.

கொரியா குடியரசின் துணைத் தூதரகடத்தின் டெப்டி கன்சல் ஜெனரல் எம் ஹாங் யூப் லீ முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இவரை வரவேற்கும் பொருட்டு மாணவர்கள் கொரிய கலாச்சாரத்தை கவரும் வகையில் ஆடை அணிந்து வரவேற்றனர். எல்கேஜி முதல் 6 ஆம் வகுப்பு வரையிலான மாணவ செல்வங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்ச்சி விருந்தினரை அசர வைத்தனர் 

Korean Day Celebration

"

கொரிய நாட்டில் பின்பற்றப்படும் கலாச்சார நிகழ்ச்சிகளை அடிப்படையாக கொண்ட அழகிய ‘அரிரங்’ மெல்லிசைப் பாடல் பார்வையாளர்களை கவர்ந்தது. பாரம்பரிய நடன நிகழ்ச்சி மற்றும் இசைக்குழு அனைவரையும் கவர்ந்தது. மேலும் கொரிய நாட்டுப்புறக் கதைகளின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் ‘ஹரே அண்ட் ஆமை’ என்ற தலைப்பில் ஒரு ஸ்கிட் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் "சர்வதேச புரிதல்" ஏற்படும் வண்ணம் மாணவ செல்வங்களுக்கு இந்த நிகழ்ச்சி அமைந்து உள்ளது. மேலும் கொரிய நண்பர்களுடன் சேர்ந்து சக மாணவர்களும் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் மாணவ செல்வங்கள் உலகளாவிய குடிமக்களாக மாறுவதை உறுதி செய்ய முடியும்.

கொரிய நண்பர்களுடன் கொரிய தினத்தை கொண்டாடியதன் மூலம் அந்நாட்டு மக்களின் கலாச்சாரத்தை தெரிந்துக்கொள்ளும் ஓர் அற்புதமாக அமைந்தது கிண்டி இந்துஸ்தான் சர்வதேச பள்ளியில் பிரமாண்டமாக நடந்த "கொரிய தின கொண்டாட்டம்"..!