1985 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியானது, பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் (யுஜிசி), இந்திய அரசால், யுஜிசி சட்டம் 1956 இன் பிரிவு 3 இன் கீழ் 2008-09 கல்வியாண்டில் இருந்து HITS என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது (Hindustan Institute of Technology and Science). இன்று, இந்துஸ்தான் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனம் தமிழகத்தில் மாணவர்கள் மிகவும் விரும்பப்பட்டு பயில நினைக்கும் பொறியியல் நிறுவனங்களில் ஒன்றாகும். இது மிகவும் தகுதிவாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டுள்ளது. மேலும் சிறப்பானபாடத்திட்டம், கூடுதல் சிறப்பு பாடத்திட்டத்திற்காக சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக உள்ளது. இதன் காரணமாகவே பல்வேறு நாடுகளில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து பயிலஆர்வம் காண்பிக்கின்றனர்.

ஏரோநாட்டிகல், ஆட்டோமொபைல், கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், மெக்கானிக்கல் மற்றும் மெகாட்ரானிக்ஸ் உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு மிக சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்படுகிறது. இங்கு பயில மாணவர்கள் நுழைவு தேர்வு மூலம் தேர்வாக வேண்டும்.

இந்துஸ்தான் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் "பொறியியல் நுழைவுத் தேர்வு" (HITSEEE)

ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் ஆன்லைன் நுழைவுத் தேர்வு (HITSEEE) நடத்தப்படுகிறது. ஊடக விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் நுழைவுத் தேர்வு எழுத ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். நுழைவுத் தேர்வின் நேரம் 2 மணி நேரம். கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகியவற்றை உள்ளடக்கிய 120 கேள்விகளுக்கு மாணவர்கள் பதிலளிக்க வேண்டும். நுழைவுத் தேர்வு மதிப்பெண் மற்றும் தகுதித் தேர்வில் மதிப்பெண்களின் அடிப்படையில், யு.ஜி (பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்) திட்டங்களில் சேருவதற்கு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதுபற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை சொடுக்கவும்

நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பல்கலைக்கழகத்தின் இளங்கலை திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.தொழில்முறை அல்லாத திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான திட்டங்களுக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. சமுதாயத்தின் பின்தங்கிய அல்லது பொருளாதார ரீதியாக பிரிவுகளில் இருந்து வந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருந்தால் அவர்களுக்கு சிறப்பு சலுகை கிடைக்கப்பெறும். ஆரம்பத்தில் பதிவுசெய்யப்பட்டு ஆனால் குறிப்பிட்ட செமஸ்டர் / காலத்திற்கு சேராத மாணவர்கள் மீண்டும் பதிவு செய்யலாம். அத்தகைய மாணவர்கள் அதற்கான படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் மீண்டும் சேரலாம். இந்துஸ்தான் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனம் அல்லது வேறு எந்த நிறுவனத்திலிருந்தும் வெளியேற்றப்பட்ட மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் மீண்டும் சேர்க்கப்படமாட்டாது.

பல்கலைக்கழக விதிமுறைகளின்படி பிளஸ் டூ / எச்.எஸ்.சி / இடைநிலை / அதற்கு சமமான - தேர்வு மதிப்பெண்கள் போன்றவற்றுடன் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களைக் கருத்தில் கொண்டு தகுதி அடிப்படையில் சேர்க்கை இருக்கும். யாரெல்லாம் தகுதியானவர்கள் ?  வேதியியல் / உயிர் தொழில்நுட்பம் / உயிரியல் தொழில்நுட்ப தொழில்சார் கட்டாய பாடங்களுள் ஒன்று மற்றும் இயற்பியல் மற்றும் கணிதத்துடன் தேர்ச்சி (10 + 2) அல்லது அதற்கு சமமான தேர்வு. கணிதத்தில் குறைந்தபட்சம் 60% உடன் எடுக்கப்பட்ட மேற்கண்ட பாடங்களில் குறைந்தது 50% மதிப்பெண்கள் (ஒதுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்றால் 45%) பெற்றிருக்க வேண்டும்.

பொது கல்வி சான்றிதழ் - GCE (கேம்பிரிட்ஜ் விதிமுறைகள்)

முதலாம் ஆண்டு  E&Tபடிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பொது கல்வி சான்றிதழ்(GCE) பெற்றிருத்தல் வேண்டும். அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் / கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் ‘மேம்பட்ட நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்திய நாட்டினர் மற்றும் இந்திய பள்ளிகளில் பிளஸ் டூ / எச்.எஸ்.சி படித்தவர்கள் ஆன்லைன் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இதில் இரண்டாம் நிலை / +2 தேர்வு முடிவுகளுக்கு காத்திருக்கும் மாணவர்கள் ஆன்லைன் நுழைவுத் தேர்வுக்கு பதிவு செய்ய தகுதியுடையவர்கள். வெளிநாட்டு நுழைவுத் தேர்வாளர்கள் / என்.ஆர்.ஐ.க்கள் ஆன்லைன் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

வயது வரம்பு: விண்ணப்பித்த ஆண்டின் ஜூலை முதல் தேதியின்படி உயர் வயது வரம்பு 19 வயதாக இருக்கும்.

கல்லூரியின் மற்ற செயல்பாடு : மாணவர்களுக்கு என்.சி.சி, என்.எஸ்.எஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் உதவித்தொகை பெறுவதற்கும் வழிவகை செய்கிறது. மேலும் சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகம் இயக்குநர் (சர்வதேச விவகாரங்கள்) தலைமையில், சர்வதேச அளவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பு போன்ற பல்கலைக்கழகத்தின் பரந்த அளவிலான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது. மேலும் வெளிநாட்டில் படிப்பை தொடர ஊக்குவித்தல்,  தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் என அனைத்து செயல்பாடும் உள்ளது. எங்கள் மாணவர்கள் செமஸ்டர் தேர்வை வெளிநாடுகளில் படிப்பது, கோடைகால சிறப்பு பயிற்சி திட்டம் என அனைத்திலும் சர்வதேச அளவில் கையாளும் வாய்ப்பை பெறுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மாநாடுகள், கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள்(workshops), சிம்போசியங்கள் மற்றும் பிற முக்கியமான கல்வி நிகழ்வுகளை நடத்துகின்றன. இந்துஸ்தான் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனத்தின்(HITS) ஆராய்ச்சி முயற்சியான CLEAN ENERGY AND NANO CONVERGENCE (CENCON) மையம் “ஸ்மார்ட் மெட்டீரியல் மீட் -2018” குறித்த சர்வதேச சிம்போசியம் மற்றும் பயிற்சி பட்டறையை 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 30, 31 ஆகிய இரு தினங்களில் சென்னை பதூரில் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை சொடுக்கவும்