ஆண்மைக்கு ஆப்பு வைக்கும் "முக்கிய உணவு பொருள்"..! மறந்தும் இனி அதை அதிகமாக சாப்பிடாதீங்க..! 
 
அதிக சர்க்கரை சாப்பிட்டால் ஆண்களுக்கு விந்தணு பிரச்சனை ஏற்படும் என ஓர் ஆய்வின் மூலம் நிரூபணம்  ஆகி உள்ளது.அதாவது பிளாஸ் பயோலஜி என்ற இதழில் வெளியான ஆய்வில் இந்த அதிர்ச்சி அறிக்கை தெரியவந்துள்ளது. 

அதாவது விந்தணுக்களில் இருக்கக்கூடிய ஆர்.என்.ஏ பிராக்மெண்ட்ஸ், இது அளவுக்கு அதிகமான சர்க்கரையை எடுத்துக் கொள்ளும். இதன் காரணமாக விந்தணு குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக 15 ஆண்களை வைத்து முயற்சி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் எந்தவித கெட்ட தீய பழக்கவழக்கங்கள் இல்லாதவர்களாகவும் இவர்களுக்கு அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களை தினமும் மூன்றரை லிட்டர் வரை கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து அவர்கள் குடித்து வந்த நிலையில், அவர்களின் விந்தணுக்களின் செயல் குறைய தொடங்கியுள்ளது.

விந்து அணுக்களின் இயக்கம் குறைந்ததால் அதனுடைய தரமும் குறைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அதிக சர்க்கரையை எடுத்துக் கொள்வது தவிர்க்கப்பட வேண்டியது  நல்லது.  இதெல்லாம் தவிர்த்து சாதாரணமாக நீரழிவு நோய்... அதாவது சர்க்கரை நோய் உள்ளவர்களும் தாம்பத்திய உறவு மேற்கொள்வதில் சிக்கலாக உணர்வார்கள். காரணம்.. ஆணுறுப்பில் இருக்கக்கூடிய ரத்த நாளங்களில் சீராக இரத்த ஓட்டம் இல்லாததும் தாம்பத்திய வாழ்க்கை பாதிக்க ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கெல்லாம் ஒரே வழி, சர்க்கரை அதிகம் சாப்பிடுவதை குறைத்துக்கொண்டு ஆரோக்கியமான உணவு முறைகளை கையாள வேண்டும். ரத்த ஓட்டம் சீராக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி மற்றும் யோகா  செய்வதும் மிக சிறந்தது.

எனவே அதிக சர்க்கரையை எடுத்துக் கொள்வது சரியானதாக இல்லை. எனவே தம்பதிகள் இதனை புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு சர்க்கரை அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது மிக மிக சிறந்தது. மேலும் பீட்ரூட் சாப்பிடுவதை அதிகரித்துக்கொண்டால் ஆண்மை குறைபாடு பிரச்சனைக்கு ஓரளவிற்கு தீர்வு  கிடைக்கும். ஆனால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிகளவில் பீட்ரூட்டை எடுத்துக்கொள்ள கூடாது என்னது குறிப்பிடத்தக்கது.