Asianet News TamilAsianet News Tamil

பேஸ்புக்கில் பெண் போட்டோவை வைத்துள்ள நபரா நீங்கள்...? உங்களுக்கு ஆப்பு ரெடி..!

hereafter no one create fake id in facebook
hereafter no one  create fake id in facebook
Author
First Published Jan 3, 2018, 7:20 PM IST


பேஸ்புக்கில் போலியான கணக்கை தொடங்க முடியாத அளவிற்கு தற்போது ஒரு புது ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது பேஸ்புக் நிறுவனம்

பேஸ்புக்கில் ஒரு கணக்கை தொடங்க வேண்டுமென்றால், மொபைல் எண் மற்றும் மெயில் ஐடி இருந்தால் போதுமானது.

இவை இரண்டையும் பயன்படுத்தி,ஏராளமான நபர்கள்  போலியான பேஸ்புக் கணக்கை ஓபன் செய்து,அது மூலம் பல பிரச்சனைக்கு வழி வகுத்தனர்.

hereafter no one  create fake id in facebook

அதாவது,வேறு ஒரு பெண் போட்டோவை வைத்து,ஆண் நபர் ஒருவர் பல பெண்களுடன் நட்பாக பழகி காதலாகி மாறி, பல குற்ற சம்பவங்கள் முதல் மார்பிங் செய்வது வரையிலும்,

தீவிரவாதம் முதற்கொண்டு அனைத்திற்கும் வழி வகுத்து வந்தது சமூகவலைத்தளங்கள்

இந்நிலையில்,போலி கணக்குகளை கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை கொண்டு வந்துள்ளது பேஸ்புக்.

அதாவது ஒரு கணக்கை துவங்கும் போது போலியான  வேறொரு புகை படத்தை அப்லோட் செய்தால்,அது தானாகவே டேக் செய்து காட்டும்.

அதாவது,அந்த புகைப்படம் ஏற்கனவே பயன்பாட்டில்  இருந்து வரும் பட்சத்தில் அந்த புகைப்படம் யாருடையது  மற்றும் அந்த புகைப்படத்தை யார் பயன்படுத்துகிறார்கள் என்பதை மிக எளிதில் கண்டறிய முடியும்.

hereafter no one  create fake id in facebook அவ்வாறு மற்றொருவரின் புகைப்படத்தை,அவர்கள் அனுமதி இன்றி தவறான செயல்களுக்காகவும்,போலி கணக்கை  தொடங்கவும் பயன்படுத்தினால்,உரிய நபருக்கு அந்த  போட்டோ குறித்த விவரம் தெரியவரும்.

பின்னர் புகார் தெரிவித்தால் அந்த போலி கணக்கு  உடனடியாக முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios