வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி..!  "

ஹெல்மெட் அணியாவிட்டால் ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கும் நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

90 சதவீதம் இளைஞர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் தான் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேறி உள்ள மோட்டார் வாகன சட்டத் திருத்தம் விரைவில் அமலுக்கு வர உள்ளது.நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன சட்டத் திருத்தம் நிறைவேறியதும் ரூ.100 இல் இருந்து ரூ.1,000 மாக அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

எனவே, அருகில் தானே செல்கிறோம் என நினைத்து ஹெல்மெட் அணியாமல் செல்வது தவறு... எப்படி செல்போனை மறக்காமல் எப்போதும் நம் கையிலேயே வைத்து உள்ளோமோ...? அதே போன்று ஹெல்மெட் அணிவதை மனதளவில் பதிய வைத்து எங்கு சென்றாலும் எடுத்து செல்ல வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இருசக்கர வாகனத்தை எவ்வளவு தூரம் சென்றாலும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். சென்னையில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மாநகர போக்குவரத்து போலீசார் இவ்வாறு  எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த தகவலை எளிதாக எடுத்துக்கொண்டு, பழைய  மாதிரியே  எளிதில் போலீசார் விட்டுவிடுவார்கள் என நினைத்தால் பிரச்சனை நமக்கு தான்.