இந்த ஒரே வீடியோ போதும் நாம் திருந்த... திக் திக் வீடியோ..! 

கோவை காந்திபுரத்தில் நகரப்பேருந்து ஒன்று கிராஸ்கட் சாலையில் இருந்து பேருந்து நிலையத்திற்குள் நுழைய வந்துகொண்டிருந்தது. அப்போது பேருந்தில் இடப்புறமாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இருவரும் எதிர்பாராதவிதமாக சக்கரத்தில் சிக்கி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டனர். ஆனால் இவர்கள் இருவரும் தலைக்கவசம் அணிந்து இருந்ததால் எந்தவித பெரிய ஆபத்தும் இல்லாமல் உயிர் பிழைத்தனர்.

இருந்தாலும் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பக்கமிருக்க தலைக்கவசம் உயிர்க்கவசம் என பார்க்குமிடமெல்லாம் எழுதி வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தாலும், தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அரசு தெரிவித்தும்,  அணியாதவர்கள் அபராதம் செலுத்த வேண்டுமென கெடுபிடி காண்பித்தாலும் இன்றளவும் தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்வதை பார்க்க முடிகிறது.

"

இதை பார்த்தும் நாம் திருந்தவில்லை என்றால் வேறு யாராலும் நம்மை  திருத்த முடியாது என்பதை இந்த ஒரு வீடியோ மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.