3 மீட்டர் தூரத்தில் இருப்பது கூட தெரியல..! கிருஷ்ணகிரியில் இப்படி ஒரு பனிப்பொழிவு...! 

ஓசூர் என்றாலே எப்போதும் கூலிங்கா இருக்கஓடிய ஓர் இடம் என்பது நமக்கு தெரிந்தது தான். அதிலும்  குளிர்காலம் என்றால் சொல்லவா வேண்டும்..? பயங்கர குளிர் மற்றும் பனிப்பொழிவு  மிக அதிகமாக இருக்கும். 

அந்த வகையில் இன்று வழக்கத்தை விட அதிகப்படியான பனிப்பொழிவு இருந்து வருவதால் மழையை போன்று பனி கொட்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில்  வரக்கூட முடியாமல் அவதிப்பட்டனர். 

முன்னால் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு பனி படர்ந்து உள்ளது. இதன் காரணமாக அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டும், ஒலி எழுப்பியவாறு வாகனங்களை இயக்கினார்.

மேலும் பொங்கல் பண்டிகைக்கான பள்ளி,கல்லூரி விடுமுறை என்பதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கவில்லை. மற்றபடி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். கடும் குளிரை சமாளிக்க ஸ்வட்டர் அணிந்துகொண்டு தான் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.