மூச்சு கூட  விட முடியாத அளவிற்கு பயங்கர ஜனம்..! 

நேற்று திருப்பூர் வநத பிரதமர் மோடி வண்ணாரப்பேட்டை - டிஎம்எஸ் இடையிலான 10 கிலோ மீட்டர் வழித்தடத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதன் மூலம் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டம் முழுமையடைந்ததை தொடர்ந்து, கட்டணத்தையும் குறைத்து உள்ளது நிர்வாகம். வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான நீலநிற வழித்தடத்திற்கு அதிபட்சம் 60ரூபாய், சென்டிரல் ரயில்நிலையம் முதல் கோயம்பேடு வழியாக ஆலந்தூர் வரையிலான பச்சை நிற வழித்தடத்திற்கு அதிகபட்சமாக 50ரூபாய் என டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது  தவிர நேற்று இன்றும் இலவசமாக  மெட்ரோவில் பயணம் செய்யலாம் என தெரிவித்ததையடுத்து மக்கள் மிகவும் ஆர்வமாக மெட்ரோவில் பயணம் செய்தனர்.

மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு, இன்று மெட்ரோவில் பயணம்செய்ய மக்கள் திரண்டு வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், கட்டணத்தை இன்னும் சற்று குறைத்தால் அனைத்து மக்களும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்த முடியும் என  கருது  தெரிவித்து உள்ளது