தொடரும் பேய் மழை..! எச்சரிக்கை  விடுத்த  வானிலை ஆய்வு மையம்..! 

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

வங்க கடலில் இருந்த காலத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி குஜராத் அருகே சென்றுள்ளதாகவும் இதன் காரணமாக மலையோர பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்

அதன் படி, கோவை தேனி நெல்லை கன்னியாகுமரி நீலகிரியில் லேசான முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மீனவர்கள் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு மீன் பிடித்த கடலுக்குள் செல்ல வேண்டாம் என தெரிவித்து உள்ளார்.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அவ்வப்போது ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.