தமிழகத்தில் "இந்த இடங்களில்" மட்டும் இன்று பேய் மழை பெய்ய போகிறதாம்..! 

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி எங்கெல்லாம் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும்,மற்ற ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தருமபுரி, வேலூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் இந்த மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் அதிக வெப்ப காற்று உணரமுடியும் என்றும் ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எப்படி இருந்தாலும் கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள நாம் எங்கு பயணித்தாலும் நம்முடன் ஒரு வாட்டர் பாட்டில், குடை என அனைத்தையும் வைத்துக் கொள்வது நல்லது.