Asianet News TamilAsianet News Tamil

தமிழக மக்களே... மழை கொட்டு கொட்டுன்னு கொட்ட போகுதாம்..!

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடலில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் கேரள கடலோர மற்றும் தெற்கு கன்னட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
heavy rain will be expected  in  tamilnadu
Author
Chennai, First Published Jul 11, 2019, 1:12 PM IST

தமிழக மக்களே... மழை கொட்டு கொட்டுன்னு கொட்ட போகுதாம்..! 

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடலில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் கேரள கடலோர மற்றும் தெற்கு கன்னட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

heavy rain will be expected  in  tamilnadu

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், கடலூர் மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், கடலூர் மாவட்டத்தில் 7 சென்டி மீட்டர் மழையும், தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

heavy rain will be expected  in  tamilnadu

இதுதவிர காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உள்ளிட்ட பல இடங்களில் மிதமான மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த  இரண்டு நாட்களில்,தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
 
Follow Us:
Download App:
  • android
  • ios