குறிக்கப்பட்டது 4 நாட்கள்...! உஷார் மக்களே... பயங்கர மழை வரப்போகுதாம்..! 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலும் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு திருவள்ளூர் திருவண்ணாமலை காஞ்சிபுரம் விழுப்புரம் பெரம்பலூர் கடலூர் தஞ்சாவூர் திருவாரூர் நாகை அரியலூர் புதுக்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மிகுந்த கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் திண்டுக்கலில் 6  சென்டி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகி உள்ளது

தென்மேற்கு பருவமழை  நிறைவு பெறும் இந்த தருணத்தில் அடுத்துவரும் நான்கு நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வெதர்மேன் தெரிவித்துள்ளார் குறிப்பாக சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மதியம் இன்று இரவில் நல்ல மழை வர வாய்ப்பு உள்ளது என்றும் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு தொடர் மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.