தமிழகத்தில் 4 நாட்களுக்கு செம்ம மழை ..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தமிழகம் மற்றும் புதுவையில் நான்கு நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில் மட்டும் வங்க கடலில் 3 புயல், அரபிக்கடலில் 5 புயல் என மொத்தம் 8 புயல்கள் உருவாகி அதன் மூலம் தமிழகத்திற்கு ஓரளவுக்கு மழை கிடைத்தது. 

வடகிழக்கு பருவமழை இன்றுடன்  முடியும் தருவாயில், மேலும் நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது 

2019 ஆண்டு மட்டும் தமிழகம் மற்றும் புதுவையில் 4 % மழை அளவு குறைவாக பெய்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது தமிழகம் புதுச்சேரியில் இந்த ஆண்டில் பெய்ய வேண்டிய 943 mm மழைக்கு பதிலாக 907 mm மழை பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.