சென்னையில் திடீரென பெய்த மழை..! சில்லென்ற காற்றில் ஜாலியாய் வீடு திரும்பும் மக்கள்..! 

சென்னையில் கடந்த சில நாட்களாக திடீரென மாலை நேரத்தில் பெய்யும் மழையால்   மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

வெப்ப சலனம் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்றாவது முறையாக சென்னையில் மாலை நேரத்தில் மழை பெய்து உள்ளது.  குறிப்பாக சூளைமேடு வடபழனி கோயம்பேடு  பட்டினப்பாக்கம் தேனாம்பேட்டை சைதாப்பேட்டை கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நல்ல 
 மழை பெய்தது.

அதேபோன்று ராயப்பேட்டை சென்னை மந்தைவெளி ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. சென்னையில் அவ்வப்போது மாலை நேரங்களில் திடீரென பெய்யும் மழையால் சென்னையே குளிர்ந்து விடுகிறது. சில்லென்று வீசும் காற்றில் வேலை முடித்து வீடு  திரும்புபவர்கள் இப்படி ஒரு அழகிய கிளைமேட்டை என்ஜாய் செய்தபடியே வீடு திரும்புகின்றனர்.

அதேவேளையில் சென்னையின் பல முக்கிய பகுதிகளில் மழை காரணமாக ஒரு சில இடங்களில் மட்டும் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டது.