கடந்த 24 மணி நேரத்தில், சங்க கிரியில் 8 செ.மீட்டரும், கிருஷ்ணகிரியில் 7 செ.மீட்டரும், ஆம்பூர், நாமக்கலில் 5 செ.மீட்டரும் மழை அளவு பதிவாகி உள்ளது. 

தமிழகத்தில் கனமழை...! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் ..! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தின் உள் மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் படி, தமிழகத்தின் வடக்கு உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், சங்க கிரியில் 8 செ.மீட்டரும், கிருஷ்ணகிரியில் 7 செ.மீட்டரும், ஆம்பூர், நாமக்கலில் 5 செ.மீட்டரும் மழை அளவு பதிவாகி உள்ளது. 

இதே போன்று அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வடக்கு உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், பிற மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மழை வரும் 9 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும், சென்னை நகரை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.