வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கணித்தது போலவே தற்போது தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் குறிப்பாக சென்னையில் நல்ல மழை பெய்து வருகிறது.

அதில் மவுண்ட்ரோடு, நந்தனம், சைதாப்பேட்டை, கிண்டி, நுங்கம்பாக்கம்,அரும்பாக்கம், அமைந்தகரை, கீழ்ப்பாக்கம், கொளத்தூர், அண்ணாநகர், பாரிஸ், புரசைவாக்கம், வியாசர்பாடி, செனாய் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

கடந்த 2 மாதமாக சென்னையில் நிலவி வந்த கடும் தண்ணீர் பற்றாக்குறையை சற்று போக்கும் வண்ணம் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் அவ்வவ்போது மிதமான மழை முதல் கன மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுமார் ஒரு மணி நேரம் பெய்து வந்த கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.