தமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அவ்வப்போது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி,நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது நகரின் பல பகுதிகளில் லேசான  மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியசும் பதிவாக வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கோவையில் 10 செ.மீ மழையும், கல்லூரில் 9 செ.மீ மழையும், அரியலூர் புதுக்கோட்டையில் 5 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து அடுத்து வரும் 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையத்தின்  தகவல் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.