தமிழகத்தில் இந்த பகுதிகளில் தற்போது நல்ல மழையாம்..!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

அதன்படி சேலம் திண்டுக்கல் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் சில பகுதிகளில் மட்டும் பரவலான மழை பெய்து உள்ளது.சேலத்தை பொறுத்தவரையில் கொங்கணாபுரம், எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து உள்ளது.

அதே போன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், சுந்தரபாண்டியம், நத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து உள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தில் இருந்து சற்று தப்பிக்க வைத்துள்ளது இந்த மழை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது