வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரத்தில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய வங்கக்கடல் மற்றும் தென் மேற்கு வங்க கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை பொறுத்தவரையில் கோவை நீலகிரி உள்ளிட்ட இடங்களில் வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பொறுத்தவரையில், நீலகிரி மாவட்டமும் அவலாஞ்சியில் 18 சென்டிமீட்டர், வால்பாறையில் 14 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. மேல் பவானியில் 11 சென்டி மீட்டர், நடு வட்டத்தில் 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.