Asianet News TamilAsianet News Tamil

வழக்கத்திற்கு மாறாக கோடையில் மழை..! என்ன சொல்கிறது வானிலை...

heavy rain in south tamil nadu in summer season
heavy rain in south tamil nadu in summer  season
Author
First Published Mar 15, 2018, 2:43 PM IST


ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் இல்லாத மழை...

ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

தென் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக கோடை காலத்தில் இது போன்ற மழை பெய்துள்ளது உண்மையில் ஆச்சர்யமான விஷயம் என  மக்கள் பேசி வருகின்றனர்.

heavy rain in south tamil nadu in summer  season

கோடை என்றாலே,சுட்டெரிக்கும் வெயில் மட்டுமே மனதில்  நிற்கும்...இந்நிலையில்,தென் தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த மழை பெய்தது. கடும் வறட்சி மற்றும் குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள அப்பகுதியில் பெய்த திடீர் மழை விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

heavy rain in south tamil nadu in summer  season

இதேபோன்று, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், புதுக்கோட்டை மாவட்டத்திலும் நேற்று இரவு மழை பெய்துள்ளது.

இதனிடையே, அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை வடமேற்கு திசையில் நகர்ந்து, நள்ளிரவில் மினிக்காய் தீவுகள் அருகே மையம் கொண்டிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் என்றும், அரபிக் கடலில் மாலத்தீவை ஒட்டிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios