தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவமழையின் தீவிரம், மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கர்நாடகா மற்றும் கேரளாவுக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டு சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் நீலகிரி மாவட்ட அவலாஞ்சியில் மட்டும் 82 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் மணிக்கு  40 முதல் 50  கி மீ வேகத்தில் காற்று வீசும்  என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.