இந்த ஏரியாவுல இப்ப செம மழை..!  மக்கள் பெரும்  மகிழ்ச்சி..!  

கோடை வெயிலுக்கு நடுவே மதுரையில் திடீரென பெய்த கனமழையால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மே மாதம் 4 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதியான இன்று வரை நிலவி கத்திரி வெயில் முடியும்  தருவாயில், இனிவரும் காலங்களில் வெயில் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மதுரையில் திடீரென பெய்த கனமழையால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.குறிப்பாக மதுரை மாநகர் பகுதியான அண்ணாநகர் கோமதிபுரம் பாண்டி கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே வெயில் வாட்டி வதைத்துவந்த நிலையில் திடீரென பெய்த சில்லென்ற குளுகுளு மழையில் நனைந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர் மதுரை மக்கள்.