பயங்கர மழை வரப்போகுது..! எங்கெல்லாம் வெளுத்து வாங்கப்போகுது தெரியுமா..? 

மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொறுத்தவரையில் மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே போன்று கன்னியாகுமரி நெல்லை தூத்துக்குடி திருவாரூர் தஞ்சை நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஜெயங்கொண்டத்தில் 14 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 10 நாட்களாக அவ்வப்போது தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்து வந்த நிலையில் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இதற்கிடையில் சென்னையில் அவ்வப்போது மாலை நேரத்தில் மிதமான முதல் நல்ல மழை பெய்து வருகிறது.

இருந்தபோதிலும் பகல் நேரத்தில் நல்ல வெயில் நிலவுவதால் வெயிலின் தாக்கத்தையும் உணரமுடிகிறது பின்னர் வெப்ப சலனம் காரணமாக மாலை நேரத்தில் மிதமான மழை பெய்கிறது என்பது குறிப்பிடடகக்கது.