8 மாவட்டத்தில் கனமழை..! சென்னையிலும் பயங்கர மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக எட்டு மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக கனமழை பெய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்றால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான கோவை தேனி திண்டுக்கல் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. நேற்றைய தினத்தில் அதிக பட்சமாக அரியலூரில் 9 சென்டி மீட்டர் மழையும், அரூரில் 8 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று நாகை மதுரை திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் ஐந்து சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இரவு அல்லது மாலை நேரத்தில் மட்டும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக கடும் வெயில் மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக அவதிப்பட்டு வந்த சென்னை மக்களுக்கு தற்போது அவ்வப்போது பெய்து வரும் மழை சற்று ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது.