5 ஆம் தேதி வரை தமிழகத்தில் நல்ல மழை..! வானிலை ஆய்வு மையம் தகவல்..! 

தமிழகத்தில் வரும் 5ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில் செம்மஞ்சேரியில் 4 சென்டி மீட்டர் மழையும் கொளப்பாக்கத்தில் 3 சென்டி மீட்டர் மழையும் மீனம்பாக்கத்தில் 3 சென்டி மீட்டர் மழையும் செங்கற்பட்டில் இரண்டு சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

வளிமண்டலத்தில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் இடமாக தமிழகம் இருப்பதால் வருகிற ஐந்தாம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாகவே தமிழகம் முழுவதும் மிதமான வெப்ப நிலையே காணப்பட்டது. குறிப்பாக சென்னையை பொருத்தவரையில் அவ்வப்போது லேசான மழை மற்றும் நேற்று இரவு  நல்ல மழையும் பெய்தது. எனவே 2020 புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.