பயங்கர மழை வராதாம்..! சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்லிடுச்சு..! 

கடலோர பகுதிகளில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழக கடலோரப் பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், குறிப்பாக காஞ்சிபுரம், விழுப்புரம்,சென்னை, திருவள்ளூர் கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுவையிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் தற்போது உள்ளவாறே, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் பொறுத்தவரையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்பது கூடுதல் தகவல். கோடைக்காலம் முடிந்து தற்போது மழை சீசன் என்பதால் அவ்வப்போது பெய்து வரும் லேசான மழை மக்களை மகிழ்ச்சி அடைய செய்கிறது.சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து ஓரளவிற்கு தாக்குப்பிடித்து தற்போதைய மிதமான கிளைமேட்டை என்ஜாய் செய்து வருகின்றனர் மக்கள்.