வெப்ப சலனம் காரணமாக நெல்லை விருதுநகர் விழுப்புரம் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரையில் நேற்று இரவு மிதமான மழை பெய்து உள்ளது. ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்து உள்ளது. கிண்டி மயிலாப்பூர் ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இதமான காற்றுடன் மழை பெய்துள்ளது. ஐயப்பன்தாங்கல் போரூர் காட்டுப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு நல்ல மழை பெய்து உள்ளது.

இதேபோன்று தமிழகத்தின் மற்ற பகுதிகளான திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கொக்கிரகுளம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் ஸ்ரீவில்லிப்புத்தூர் விழுப்புரம் திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது. மேலும் இன்று மற்றும் நாளை தமிழகத்தில் குறிப்பாக 9 மாவட்டங்களில் நல்ல மழை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் திருவள்ளூர் சென்னை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.சென்னையில் நேற்று இரவு பெய்த  மிதமான கனமழைக்கே மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இந்த நிலையில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு சென்னையில் நல்ல மழை இருக்கும் என்ற வானிலை ஆய்வு மைய செய்தி மேலும் மக்களுக்கு மகிழ்ச்சியையும் தெம்பையும் கொடுத்து உள்ளது.