இடி மின்னலுடன மழைக்கான வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன..?  

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மேலும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மதுரை தஞ்சாவூர் பெரம்பலூர் கடலூர் திருவாரூர் விழுப்புரம் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மட்டும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பொருத்தவரையில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியசும் இன்று பதிவாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.