மகிழ்ச்சியான செய்தி..! சென்னைக்கு நல்ல மழை..! 

தமிழகம் மற்றும்  புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கடந்த சில மாதங்களாக தண்ணீர் பற்றாக்குறை மற்றும் கடும்வெயிலின் தாக்கத்திலிருந்து பெரும் அவதிப்பட்டு வந்த மக்கள் தற்போது நிம்மதி  பெருமூச்சு விட்டுள்ளனர். காரணம். வெயிலின் தாக்கமும் மெல்ல மெல்ல குறைய தொடங்கி உள்ளது.. தண்ணீர் பிரச்சனையும் மெல்ல மெல்ல தீர்ந்து வருகிறது என்றே சொல்லலாம்.

இதற்கிடையில் சென்னை மக்களின் குடீர் பிரச்னையை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் இன்று தண்ணீர் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் மழைக்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். 

குறிப்பாக, தூத்துக்குடி,கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்குக்கும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்புள்ளது என்றும் சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

இந்த நிலையில் தற்போது நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம், வண்ணார்படேடை, முருகன்குறிச்சி, பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.