கனமழை எச்சரிக்கை...! 9 மாவட்டங்களில் பேய்மழைக்கு வாய்ப்பு..!

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரி கடல் பகுதியில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் கோவை திருப்பூர் நீலகிரி கிருஷ்ணகிரி தருமபுரி ஈரோடு சேலம் தேனி திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நீலகிரி மாவட்டம் குந்தா பாலம் தேனி மாவட்டம் பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

நாகப்பட்டினம் கரூர் திருச்சி தேனி திருவாரூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் மதுரை சிவகங்கை தூத்துக்குடி விருதுநகர் திருநெல்வேலி கன்னியாகுமரி கோவை நீலகிரி சேலம் திண்டுக்கல் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது
என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.