4 மாவட்டங்களில் மிக மிக கனமழை எச்சரிக்கை...! உஷார் மக்களே...! 

திருப்பூர் ஈரோடு கோவை நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்துவரும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மாலத்தீவு பகுதியில்  40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தலைஞாயிறில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக புதுக்கோட்டை மற்றும் தலைவாசலில் 13 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.