வங்கக்கடலில் 4 ஆம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

4 ஆம் தேதி முதல் கனமழை..! உஷார் மக்களே..! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அரபிக்கடலில் பகுதியில் உருவாகி உள்ள மஹா புயல் தீவிரமடைந்து வருவதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது 

அதன் படி வரும் 4ம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது 

மேலும் மாலத்தீவு லட்சத்தீவு கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக்கடலில் 4 ஆம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும்,சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.