உஷார் மக்களே..! 15 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை...! 

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்துவரும் 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம்,கடலூர், தூத்துக்குடி, நெல்லை, நீலகிரி, நாகை புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் 14 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது என்றும் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 12 சென்டிமீட்டர், திருவாரூர் 9 சென்டிமீட்டர், மகாபலிபுரத்தில் 7 சென்டிமீட்டர் மழை அளவும்  பதிவாகி உள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் மாலத்தீவு லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள கடற்கரை பகுதி உள்ளிட்ட இடங்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.சென்னையை பொருத்தவரையில் ஏர்போர்ட்டில் 5 சென்டிமீட்டர் மழை அளவும் நுங்கம்பாக்கத்தில் 3 சென்டிமீட்டர் மழை அளவும் பதிவாகி உள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்யும் என்றும் ஓரளவிற்கு மழை அளவு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில்  அவ்வப்போது மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான தூரல் தொடர்ந்து இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.