இன்னும் 5 நாட்களை தான்...! எப்படி மழை வருதுன்னு பாருங்க..! 

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு மழை வர வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது 

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில், பாபநாசத்தில் அதிக பட்சமாக 5 செ.மீட்டர் மழையும், செந்துறை, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் 3 செ.மீட்டரும்மழையும் பதிவாகி உள்ளது. இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தென் மாவட்டங்களில் மழை பொழிவு இருக்குமென தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
மேலும் இரண்டு நாட்களுக்கு பின்னர் மெல்ல மெல்ல குறைந்து ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் மழை பெய்ய தொடங்கும் என அவர் தெரிவித்து உள்ளார்.