Asianet News TamilAsianet News Tamil

தாறுமாறாக பெய்யப்போகும் மழை...! வானிலை ஆய்வு மையம் சொன்னது என்ன..?

தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தேனி கோவை நெல்லை குமரி நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது 

heavy rain expeacted for two days in tamilnadu
Author
Chennai, First Published Aug 13, 2019, 2:21 PM IST

தாறுமாறாக பெய்யப்போகும் மழை...! வானிலை ஆய்வு மையம் சொன்னது என்ன..? 

வெப்ப சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான முதல் விதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தேனி கோவை நெல்லை குமரி நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அதை போன்று கடலோர மாவட்டங்களான காஞ்சிபுரம் கடலூர் விழுப்புரம் சென்னை திருவள்ளூர் திருவாரூர் நாகை புதுக்கோட்டை தஞ்சை ராமநாதபுரம் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

heavy rain expeacted for two days in tamilnadu

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

heavy rain expeacted for two days in tamilnadu

மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios