சுட்டெரிக்கும் வெயிலும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. கடந்த ஒரு வார காலமாகவே அதிக உஷ்ணம் காரணமாக இரவு நேரத்தில் அதிக வெப்ப நிலையை உணர முடிந்தது. காலை நேரத்தில் ஒன்பது மணி ஆனாலே வெப்பம் சுட்டெரிக்க தொடங்குகிறது.

இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் அடுத்த நான்கு தினங்களுக்கு வானிலை வறண்டு காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மழையை பொருத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் நான்கு சென்டிமீட்டர் வரை மழை பதிவாகி உள்ளது என்றும்,சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே லேசான மழைக்கு வாய்ப்பு இருந்தாலும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நாளை முதல் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவும் பின்னர் கோடை வெயில் சுட்டெரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் நெருங்கும் முன்பே தற்போது வெயில் அதிகரித்துள்ளதால் மே மாதங்களில் எந்த அளவிற்கு வெயில் இருக்கும் என நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஒவ்வொரு ஆண்டுமே கூடுதலாக வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டும் அதிக வெப்பநிலை நிலவும் என கூறப்படுகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் வரும் வழியிலும் போகும் வழியிலும் பேருந்து நிலையத்திலும் உள்ள தயிர் மோர் ஜூஸ் கடைகளில் அலைமோதுகின்றனர். இப்போதே வியாபாரமும் களைகட்டத் தொடங்கியுள்ளது.சென்ற வருடத்தை விட இந்த ஆண்டு அதிக வெப்ப விலை நிலவும் என்பது மிகவும் வருத்தமான செய்தி தான்.