ஸ்தம்பித்து நிற்கும் காஞ்சிபுரம்..! சனிக்கிழமை சிறப்பாக 2 லட்சம் மக்கள் ஒரே இடத்தில் கூடல்..! 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தரிசனம் இன்றோடு பதின்மூன்றாவது நாள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக இன்று சனிக்கிழமை என்பதால் பக்தர்களின் கூட்டம் இரட்டிப்பாகி உள்ளது.

ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் இன்று வார விடுமுறை மற்றும் சனிக்கிழமை என்பதால் பெருமாளுக்கு உகந்த தினம் என்பதை கருத்தில் கொண்டு பக்தர்கள் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் காஞ்சிபுரத்தில் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூபாய் 500 கட்டணத்தில் விஐபி வரிசையில் கூட ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் காத்திருப்பதாகவும், பொது வரிசையில் செல்பவர்கள் ஐந்து கிலோமீட்டர் தூரம் வரை நின்று கொண்டு காத்திருப்பதாகவும் தற்போது நமக்கு தெரிய வந்துள்ளது.

கடந்த 12 நாட்களில் மட்டும் 13 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது