உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது இந்தநிலையில், தற்போது அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு தினம் கொடுக்கப்படும் உணவுகள் மற்றும் சிகிச்சை முறை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு மருத்துவமனையில் அப்படி என்னதான் சிகிச்சை அளிக்கிறார்கள் என்ற கேள்விக்கான பதிவு தான் இது.
ஓமந்தூரார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
மனதளவிலும் உடலளவிலும் பாதிப்பு ஏற்படாதவாறு நம்பிக்கை வார்த்தை கூறி அன்பாக கவனித்து வருகிறார்கள்.அனைவரும் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப் பட்டுள்ளனர்
அறைக்கு செவிலியர் மற்றும் சுகாதார பணியாளர்கள் மருத்துவர்கள் முழு கவச உடையுடன் வந்து செல்கின்றனர்.
காலையில் முதலில் கபசுரக் குடிநீர், 9 மணி அளவில் பொங்கல் அல்லது இட்லி சாம்பார், 11 மணியளவில் ஒரு சூப், 12 மணி அளவில் பிரெட் ஜாம்,(மூன்று பேருக்கு ஒரு பாக்கெட்)
மதியம் ஒரு மணி அளவில் சப்பாத்தி குருமா சாம்பார் சாதம் மற்றும் முட்டை
மாலை 5 மணி அளவில் லெமன் டீ, அதனுடன் கருப்பு கொண்டை கடலை சுண்டல், மாலையில் விருப்பம் உள்ளவர்களுக்கு சின்ன டிபன்
இரவு பிரிஞ்சு சாதம் அல்லது தோசை அல்லது இடியாப்பம், இரவு படுக்கும்முன் சுக்கு மிளகு உள்ளிட்டவை போட்ட கஷாயம் கொடுக்கிறார்களாம். உணவுகள் அனைத்தும் சுடச்சுட கொடுப்பது மிகவும் அருமை

இடையில் எப்போதாவது வாழைப்பழம் அல்லது பேரிச்சை கொடுக்கிறார்கள்
காலையில் 7, 8 மாத்திரைகள், இரவு 7, 8 மாத்திரைகள் (பாராசிட்டமால் மற்றும் ஆன்டிபயோடிக் மாத்திரைகள், பாசிட்டிவ் உள்ளவர்களுக்கு ஹைட்ரோகுளோரோ குயின்)
அனைத்து அறைகளிலும் ஏசி போடுவதில்லை. மின்விசிறி மட்டுமே.
தனிமைப்படுத்தப்பட்டு உள்ள உறவினர்கள் ஒரே வார்டில் இடைவெளிவிட்டு தனித்தனி படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் தனித்தனி அறைகளில் உள்ளனர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் நிற்கவைத்து தலை முதல் கால் வரை எக்ஸ்ரே எடுக்கிறார்கள். சிடி ஸ்கேன் எடுக்கிறார்கள்
காலையில் எழுந்தவுடன் தூக்கத்தில் எழுப்பி குழந்தைகளுக்கு ரத்த பரிசோதனை செய்கிறார்கள். விரலில் குத்தினால் ரத்தம் வரவில்லை. அதனால் மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து வந்து ரத்தம் எடுக்கிறார்கள்.
நான்கு இட்லிக்கு தகுந்த சாம்பார் கொடுத்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது
ஐந்து பேருக்கு ஒரு டாய்லெட் என்ற வசதி உள்ளது. பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் ஒரே டாய்லெட்டை பயன்படுத்தும்போது தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது

மற்றபடி, வீட்டில் கவைத்துக்கொள்வதை விட, மருத்துவமனையில் நேரத்துக்கு நேரம் சரியான சாப்பாடு, ஊட்டச்சத்து மிகுந்த ஸ்னாக்ஸ் என கொடுத்து ஆஹா ஓஹோ என கவனித்துக்கொள்கின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.
