இட்லி மாவு இல்லனா கோதுமை மாவுல இட்லி சுட்டு பாருங்க.. சுவை அட்டகாசமாக இருக்கும்.. ரெசிபி இதோ!
இந்தப் பதிவில் சத்தான மற்றும் சுவையான ருசியில் கோதுமை இட்லி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
அச்சோ. வீட்டில இட்லி மாவு இல்லையே இப்போ காலையில என்ன சமைப்பது என்று புலம்பும் இல்லதரசிகளுக்கான பதிவு தான் இது.
உங்க வீட்ல கோதுமை மாவு இருந்தால் அதை வைத்து இட்லி எப்படி செய்யலாம் என்பதை குறித்து தான் இந்த பதிவு. இந்த கோதுமை இட்லி செய்வதற்கு மிகவும் எளிது. மேலும் இதன் சுவை சற்று வித்தியாசமாகவும், சாப்பிடுவதற்கு அருமையாகவும் இருக்கும். குறிப்பாக, இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் இந்த கோதுமை இட்லி வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த கோதுமை இட்லி எப்படி செய்வது என்பதை குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
இஞ்சி - 1 சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
துருவிய கேரட் - 1
சமையல் சோடா - 1/4 ஸ்பூன்
தண்ணீர் - 1 1/2 கப்
தயிர் - 1/2 கப் (அதிக புளிப்பில்லாதது)
கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோதுமை இட்லி செய்ய முதலில் ஒரு தவாவை அடுப்பில் வைத்து அதில் எடுத்து வைத்த கோதுமை மாவை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுத்து, பின் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு ஆற வையுங்கள். பிறகு அதே தவாவில் சிறிதளவில் என்னை ஊற்றி சூடானதும் அதில் கடலை பருப்பு உளுந்தம் பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் கடுகு சீரகம் போட்டு தாளித்து, அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
சிறிது நேரம் கழித்து துருவிய கேரட்டை அதில் சேர்த்து அதிகம் வதக்காமல், ஒரு நிமிடம் மட்டும் வதக்கிக் கொள்ளுங்கள். இதனை அடுத்து கொத்தமல்லியை தூவி அடுப்பை அணைத்து விடுட்டு, இதனை ஆற வையுங்கள். இப்போது வருது வைத்துள்ள கோதுமை மாவில் சிறிதளவு உப்பு தயிர் ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை கிளறி விட்டுங்கள். பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கிளறி விடுங்கள் முக்கியமாக கட்டிகள் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பின் அதில் சமையல் சோடாவையும் சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு, வதக்கி வைத்துள்ள பொருட்களையும் சேர்த்து நன்கு கிளறி கொள்ளுங்கள். அவ்வளவுதான் கோதுமை இட்லி செய்வதற்கான மாவு தயார்.
இப்போது இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி அது கொதித்ததும், இட்லி தட்டில் கலக்கி வைத்த மாவை ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான 'கோதுமை இட்லி' தயார் ரெடி!! இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு தெரிவிக்க மறக்காதீர்கள்..