Health: தயிரில் உள்ள நன்மைகள் என்ன?.... மழைக் காலத்தில் தயிர் சாப்பிடலாமா?
2 ஸ்பூன் தயிருடன் கால் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து காலை, மாலை என இரு நேரம் சாப்பிட்டால் அல்சர் குணமாகும். அதேபோல் தோல் நோய்களையும் போக்கும்.
தயிர் ஒரு நல்ல அருமருந்து, முக்கியமாக உடலில் ஜீரண சக்தி தருவது தயிர்தான். தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட விரைவாகவே ஜீரணமாகிவிடும். தயிர் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதில் முக்கியமான வைட்டமின் சத்துக்களும், புரதச் சத்துக்களும் உள்ளது.
வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றைத் தயிர் கலந்து நீரில் போட்டு வைத்தால் அவற்றின் நிறம் மாறாது. தயிரை சூடாக்கி பயன்படுத்தக் கூடாது.
தயிர் சரும வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடல் சூடு நீங்க தயிரைக் கடைந்து உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம், கொத்தமல்லி சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.
தயிரை தலைக்கு தேய்து குளித்தல் பளபளப்பான கூந்தலைப் பெறலாம். ஆனால் சளி, தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் தயிர் கொண்டு தலைமுடியை அலசக் கூடாது.
2 ஸ்பூன் தயிருடன் கால் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து காலை, மாலை என இரு நேரம் சாப்பிட்டால் அல்சர் குணமாகும். அதேபோல் தோல் நோய்களையும் போக்கும். மழைக் காலத்திலும், இரவு சாப்பாட்டிலும் தயிர் சேர்க்கக் கூடாது.